வெள்ளி, செப்டம்பர் 01, 2017

லெபனான் எல்லையில் ஐ.எஸ். தப்பியோட்டம்

லெப­னான் எல்­லை­யில் இருந்து பின்­வாங்­கிய ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயு­த­தா­ரி­கள் சிரி­யா­வுக்­குள் தப்­பிச் சென்­றுள்­ள­னர் என்று
பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.
சிரியா மற்­றும் லெப­னான் எல்­லை­யில் உள்ள மலைப்­ப­கு­தியை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தனது கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருந்­தது. இந்­தப் பகு­தி­யில் வசித்த மக்­க­ளை­யும் அந்த அமைப்பு மனி­தக் கேட­யங்­க­ளா­கப் பயன்­ப­டுத்­தி­யது.
மலைப்­ப­கு­தி­க­ளை­யும், மக்­க­ளை­யும் மீட்­ப­தற் கான போரை கடும்­மு­னைப்­பில் முன்­னெ­டுத்­தது லெப­னான் அரசு. குர்­தீஷ் படை­யும் லெப­னான் அர­சுக்கு உத­வி­யது.
கடந்த ஒரு மாத­தத்­துக்கு முன்­னர் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்­தப் போரில் லெப­னான் சொல்­லிக்­கொள்­ளும்­ப­டி­யான வெற்­றி­யைப் பெற்­றது.
தாக்­கு­தல்­க­ளால் அங்­குள்ள மக்­கள் பெரும் நெருக்­க­டி­யைச் சந்­தித்த நிலை­யில் மக்­களை மீட்­ப­தற்­காக தனது தாக்­கு­தல்­களை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யது லெப­னான். இந்த வாய்ப்­பைப் படுத்­திய ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயு­த­தா­ரி­கள் சிரி­யா­வுக்­குள் தப்­பிச் சென்­றுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள் ளது.