வெள்ளி, செப்டம்பர் 01, 2017

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மழை

கடந்த சில வாரங்களாகக் கடும் வெப்பமான காலநிலை நிலவிய நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் மழை பெய்கின்றது.

கடந்த சில நாள்களாக குடாநாட்டில் வெப்பநிலை உச்சம் பெற்றிருந்தது. தற்போது பெய்யும் மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதேவேளை, இன்று மற்றும் நாளைய தினங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கு அதிகமாக கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல், வட மத்திய, சபரகமுவ மாகாணங்களுக்கும் களுத்துறை மாவட்டத்திலும் கடும் மழைக்குச் சாத்தியம் உண்டு என்றும் தெரிவித்துள்ளது