தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

திருமகள் கழகத்தின் கரப்பந்தாட்ட முடிவுகள்

அரி­யாலை திரு­ம­கள் சன­ச­மூக நிலை­யத்­தின் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­கள் சில­வற்­றின் முடி­வு­கள் வரு­மாறு.

அரி­யாலை திரு­ம­கள் சன­ச­மூக நிலை­யத்­தின் கரப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற முத­லா­வது ஆட்­டத்­தில் சண்­டி­லிப்­பாய் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­க­மும் புத்­தூர் வளர்­மதி விளை­யாட்­டுக் கழக ‘பி’ அணி­யும் மோதின.

மூன்று செற்­க­ளைக் கொண்ட இந்த ஆட்­டத்­தின் முதல் இரண்டு செற்­க­ளை­யும் முறையே 25:23, 25:23 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:0 என்று நேர்­செற் வெற்­றி­பெற்­றது சண்­டி­லிப்­பாய் இந்து இளை­ஞர் அணி தொடர்ந்து இடம்­பெற்ற ஆட்­டத்­தில் புத்­தூர் சென்­றல் ஸ்ரார் விளை­யாட்­டுக் கழ­க­மும், அச்­சு­வேலி ஸ்ரார் விளை­யாட்­டுக் கழ­க­மும் மோதின.

26:24, 25:15 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முத­லிரு செற்­க­ளை­யும் கைப்­பற்றி 2:0 என்ற நேர் செற் வெற்­றி­யைப் பெற்­றது அச்­சு­வேலி ஸ்ரார்.

மற்­றொரு ஆட்­டத்­தில் புத்­தூர் கலை­மதி விளை­யாட்­டுக் கழ­க­மும் அச்­சு­வேலி கலை­ம­கள் விளை ­யாட்­டுக் கழ­க­மும் மோதின. 25:17, 25:23 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முத­லிரு செற்­க­ளை­யும் கைப்­பற்றி 2:0 என்று நேர் செற் கணக்­கில் வெற்­றி­பெற்­றது கலை­மதி.

பிறி­தொரு ஆட்­டத்­தில் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­க­மும், நீர்­வேலி காமாட்சி அம்­பாள் விளை­யாட்­டுக் கழ­க­மும் மோதின. 25:18, 25:17 என்ற புள்­ளி­க­ளைப் பெற்று 2:0 நேர் செற்­றில் வெற்­றி­பெற்று அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றி­யது ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் அணி.