வெள்ளி, செப்டம்பர் 01, 2017

வட கொரிய அதிபரை போட்டு தள்ள ஸ்பெஷல் படை- தென் கொரிய ரகசியம் கசிந்தது

வட கொரியாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அன் நாட்டுக்குள் வெளிநாட்டவர்கள்
எவரும் செல்ல முடியாது எனவே எந்த ஒரு குழுவையும் அனுப்பி அமெரிக்காவால் எந்த ஒரு காரியதையும் வட கொரிய மண்ணில் வைத்து செய்வது என்பது மிக மிக கடினமான வேலை.
ஆனால் தென் கொரியர்கள் பார்பதற்கு வட கொரியர்கள் போலவே இருப்பார்கள். இதனால் அவர்கள் எல்லை கடந்து வட கொரியாவுக்குள் சென்று, அங்கே ஒரு தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் அது கசிந்துவிட்டது என்கிறார்கள்.
தென்கொரிய ராணுவ வீரர்களில் சிலரை தெரிவு செய்து அவர்களை தற்கொலைப் படை போல வட கொரியாவுக்குள் அனுப்ப தென் கொரியா திட்டம் தீட்டியுள்ளது.
அவர்கள் குண்டுகளை கொண்டு சென்று வெடிக்கப் போவது அல்ல மாறாக மறைவான ஒரு இடத்தில் இருந்து வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை போட்டு தள்ளுவார்கள்.
ஒரு தற்கொலைப் படையணியை, வடகொரியாவுக்குள் அனுப்பி அன் நாட்டு அதிபரை போட்டு தள்ள அமெரிக்கா திட்டம் தீட்டிக் கொடுக்க இதனை தென்கொரியா செயல்படுத்தி இருந்தது.