புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, செப்டம்பர் 15, 2017

கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லம் அமைக்க மாவட்ட நீதிமன்றம் அனுமதி

கிளிநொச்சியில், மாவீரர் துயிலுமில்லத்தை அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.இந்த துயிலுமில்லம், வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்பட வேண்டுமெனவும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தை புனரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், கிளிநொச்சி பிரதேச சபை உறுப்பினரால் குறித்த பணி தடுத்து நிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து பொதுமக்கள் சிலரால் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.