வெள்ளி, செப்டம்பர் 08, 2017

பெண் ஊழியருடன் தகாத முறையில் நடந்த நிர்வாக அதிகாரிகள்! - யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் குதிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் இரு நிர்வாக அதிகாரிகள் தகாதமுறையில் நடந்துள்ளதாக
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றிருந்த போதும் இதுவரை குறித்த அதிகாரிகள் இருவர் மீதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பணிப்புறக்கணிபிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் இரு நிர்வாக அதிகாரிகள் தகாதமுறையில் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றிருந்த போதும் இதுவரை குறித்த அதிகாரிகள் இருவர் மீதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பணிப்புறக்கணிபிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று காலை 10.00 மணிக்கு ஊழியர் சங்கத்தினது சகல அங்கத்தவர்களும் தத்தமது பணியிடங்களில் இருந்து வெளியேறி இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு ஊழியர்சங்கம் அறிவித்துள்ளது.