தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

முதல்வரின் முடிவே இறுதியானது!- எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுக-வில் முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளே இறுதியானது என சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏக்கள் உறுதியேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக-வின் தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 105 எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் எந்த முடிவிற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளிப்பாளர்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கட்சி தொடர்பாக முதல்வர் எடுக்கும் எந்த முடிவுக்கும் ஆதரவு அளித்து, அந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வோம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

 கடந்த 28ஆம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 70 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்களை அழைத்துப்பேசும் நடவடிக்கையில் முதல்வர் பழனிசாமி ஈடுபட்டுள்ளார். அந்த முயற்சியின் முன்னேற்றம் தான் தற்போதைய எண்ணிக்கையின் அதிகரிப்பு. 

வரும் 12ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கான அறிவிப்புகளை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல்வரின் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதற்கான முடிவு எடுக்கும் பட்சத்தில், அதையும் தற்போதுள்ள எம்.எல்.ஏக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.