தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

பொன்சேகாவின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்! - கூட்டமைப்பு

சரத் பொன்­சேகா கூறு­வ­தைப் போன்று போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்த வேண்­டும் என, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்­சேகா கூறு­வ­தைப் போன்று போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்த வேண்­டும் என, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரிவித்துள்ளார்.

இரா­ணு­வத்­தின் முன்­னாள் தள­பதி லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய மனி­தப் படு­கொலை விட­யத்­தில் குற்­றம் இழைத்­தார் என்று போரை நடத்­திய இரா­ணு­வத் தள­ப­தி­யும், தற்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா தெரி­வித்­தி­ருந்­தார். விசா­ர­ணை­கள் நடந்­தால் ஆதா­ரங்­க­ளைத் தான் முன்­வைப்­பார் என்­றும் கூறி­யி­ருந்­தார். பிரே­சில் உட்­பட5 தென்­ன­மெ­ரிக்க நாடு­க­ளின் தூது­வ­ராக இருந்­த­வ­ரான லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய மீது போர்க் குற்ற வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டதை அடுத்தே பொன்­சேகா இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால், ஜென­ரல் ஜெகத் குற்­றம் இழைக்­க­வில்லை என்று போர் முடி­வ­டைந்த நிலை­யில் இலங்­கை­யில் மனித உரி­மை­கள் அமைச்­ச­ராக இருந்­த­வ­ரான சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த முன்­னாள் அமைச்­சர் மகிந்த சம­ர­சிங்க மற்­றும் தற்­போ­தைய அர­சில் அமைச்­ச­ராக இருப்­ப­வ­ரான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யைச் சேர்ந்த சஜித் பிரே­ம­தாச ஆகி­யோர் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

ஜெகத் ஜய­சூ­ரி­யாவை அரசு பாது­காக்­கும். இரா­ணு­வத்தை எந்­தச் சந்­தர்­பத்­தி­லும் காட்­டிக் கொடுப்­ப­தில்லை என்­பது அர­சின் கொள்கை. பொன்­சேகா கூறி­யி­ருப்­பது அவ­ரது தனிப்­பட்ட கருத்து. இது தொடர்­பில் அமைச்­ச­ர­வை­யில் பேசப்­ப­ட­வில்லை. அத­னால் அமைச்­ச­ர­வைக் கூட்­டுப் பொறுப்­புக்கு உட்­பட்ட விட­ய­மா­காது’’ என்று மகிந்த சம­ர­சிங்க கொழும்­பில் நேற்று நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்த நிலையில், ‘அமைச்­சர் சரத்­பொன்­சே­காவே இறு­திப் போரை வழி­ந­டத்­தி­ய­வர். போரின் போது நடந்த விட­யங்­கள் அவ­ருக்­குத்­தான் நன்கு தெரி­யும். அவ­ருக்­குத் தெரி­யாத ஒன்று அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­ம­தாச மற்­றும் மகிந்த சம­ர­சிங்­க­வுக்கு தெரிந்­தி­ருக்க வாய்­பில்லை. சரத் பொன்­சேகா கூறு­வ­தைப் போன்று போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்த வேண்­டும் என்­று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன்