திங்கள், செப்டம்பர் 11, 2017

நடிகை ராதாவின் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கி வைப்பு

பழம்பெரும் நடிகை ராதாவின் உடல் அவரது ஆசைப்படி மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த விஜய ராதா தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.பழம்பெரும் நடிகை ராதாவின் உடல் அவரது ஆசைப்படி மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த விஜய ராதா தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு வயது 69, நேற்றிரவு பெங்களூரில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ராதா, தீவிர சிகிச்சைக்கு பின்னர் அதிலிருந்து மீண்டார்.இறந்த பின்னர் தன்னுடைய உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்வதாக உறுதியளித்திருந்தார்இதன்படி அவரது உடல் தானம் செய்யப்பட்டது, இவரது கணவர் கே.எஸ்.எல்.சுவாமி கடந்தாண்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.