தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

நிதித்துறை இணை அமைச்சரானார் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரவை இன்று மூன்றாவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒன்பது பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு, வர்த்தகத்துறை ஒதுக்கப்பட்டது. அதற்கு பதிலாக, மின்சாரத்துறை அமைச்சராக இருந்த பியூஸ் கோயலுக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பியூஸ் கோயலிடம் இருந்த மின்சாரத்துறை, ராஜ்குமார் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டது.

இதனிடையே, மத்திய அமைச்சரவையில்,தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே, கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிதித்துறையின் இணை அமைச்சராகியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, பாதுகாப்பு என்று மத்திய அமைச்சரவையின் முக்கியமான இரண்டு துறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவாக கருதப்படுகிறது. இதனால், தமிழக பா.ஜ.க-வினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்