திங்கள், செப்டம்பர் 11, 2017

நெடுங்கேணி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

வவுனியா - மதியாமடு பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்
. வவுனியா வடக்கு நெடுங்கேணி மதியாமடு பகுதியில், துவிச்சக்கர வண்டியில் தனது கணவனை பார்ப்பதற்காக தோட்டத்திற்கு தனது மகளுடன் பயணித்த இளம் தாயொருவர் மீது திடீரென வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது.
வவுனியா - மதியாமடு பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வவுனியா வடக்கு நெடுங்கேணி மதியாமடு பகுதியில், துவிச்சக்கர வண்டியில் தனது கணவனை பார்ப்பதற்காக தோட்டத்திற்கு தனது மகளுடன் பயணித்த இளம் தாயொருவர் மீது திடீரென வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது.

இதன்போது, துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 26 வயதுடைய சுமன் வனஜா என்ற இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடன் பயணித்த இவரது மகளான ஆறு வயதுடைய கிருத்திகா படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதுடைய மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த மாணவரிடம், சாரதி அனுமதி பத்திரம் இல்லை என்பதும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.