புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், செப்டம்பர் 07, 2017

திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு இடைக்கால தடை

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டமனற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைக்குழு நோட்டீஸ் மீது செப்டம்பர் 14 வரை நடவடிக்கை எடுக்கப்படாது என பேரவை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபல் திமுக தரப்பில் வாதாடியபோது, "குட்கா பொருட்கள் கொண்டுவருவதை தடுக்க சபை விதிகள் ஏதும் இல்லை. விதிகள் இல்லாதபோது அதை மீறியதாக கூறுவது எப்படி? அதனால் சபை மாண்பை குறைத்ததாக கூறுவதும் தவறு. தினகரன் அணி ஆதரவு இல்லை என்றவுடன் 40 நாட்கள் கழித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புலோர் டெஸ்டில் வெற்றி பெறவே சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். சபை நடத்த விடாமல் ஏதும் செய்யவில்லை. குட்கா விவகாடம் பற்றி பேச அனுமதி பெற்றபின்னர் பேசினோம். தமிழக மக்களின் நலன் சார்ந்த விசயம். புற்றுனோயை உருவாக்கும் பொருட்களிலிருந்து பல தரப்பட்ட வயதுடையவர்களை காக்கவே அவையில் பேசினோம். காவல்துறைக்கு சென்றால் பலனளிக்காது என்பதால்தான் அரசிந் கவனத்தை ஈர்க்கவே குட்கா பொருட்களை காட்டினோம். மக்கள் பிரதிநிதிகள் பேச்சுரிமை பறிக்கப்பட்ட்டுள்ளது" என்றார்.

உரிமைக்குழு நோட்டீஸ் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இடைக்கால தடை விதித்துள்ள உயர்நீதிமன்றம் செப்டம்பர் 14-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது