வெள்ளி, செப்டம்பர் 01, 2017

நீட் தேர்வால் மருத்துவக்கனவைத் தொலைத்த மாணவி அனிதா தற்கொலை!


நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. இவர், +2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்களும், மருத்துவப் படிப்பின் கலந்தாய்வுக்கான கட் ஆஃப் 196.50 மதிப்பெண்களும் எடுத்திருந்தார். இவர், +2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வுகளை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருந்தபோதிலும், அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. 

இதையடுத்து, மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியால் அனிதா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, +2 தேர்வுகளின் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால், மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்திருக்கும். இவர் நீட் தேர்வில் 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்களே எடுத்திருந்தார்.