புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

கலப்பு நீதிமன்றத்தை உருவாக்காவிடின் சர்வதேச விசாரணையே நடக்கும்! - சுமந்திரன்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய அல்லது
அவர்களுடன் இணங்கிக் கொண்ட விடயங்களைச் செய்வதுதான் நல்லது என்று
 தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தினர் மீது எவரையும் கை வைக்கவிடமாட்டேன் என்று சூளுரைத்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எம்.ஏ.சுமந்திரன், “ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்கின்றார் என்பதற்காக எல்லா விடயங்களும் தடைப்பட்டு போய்விடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டபடி சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இதனை அவர் செய்யாவிட்டால் முழுக்க முழுக்க சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணையே முன்னெடுக்கப்படும். சர்வதேச சமூகத்துக்கு இணங்கிக் கொண்ட விடயங்களைச் செய்வதுதான் நல்லது – என்றார்.

   
   Bookmark and Share Seithy.com