ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

காணி சுவீகரிப்பு இன்றி பலாலியை பிராந்திய விமான நிலையமாக்கலாம்

மேல­தி­க­மா­கக் காணி­க­ளைப் பெறா­ம­லேயே பலாலி விமான நிலை­யத்­தைப் பிராந்­திய விமான நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்த முடி­யும் என்று இந்­திய ஆய்­வுக் குழு கொழும்பு அர­சுக்­குப் பரிந்­து­ரைத்­துள்­ளது.

இது தொடர்­பில் பலா­லிக்கு வந்து நேரில் ஆய்­வு­களை நடத்­திய இந்­தி­யக் குழு­வி­ன­ரின் அறிக்கை இலங்கை அர­சி­டம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
பலாலி விமான நிலை­யம் தற்­போது உள்­ளூர் மற்­றும் படைத்­துறை விமான நிலை­ய­மா­க­ வுள்­ளது. அத­னைப் பிராந்­திய விமான நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்­து­வது தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை விமான நிலை­யப் பணிப்­பா­ளர் தீபக் சாஸ்­திரி தலை­மை­யில் ஏழு­பேர் கொண்ட குழு­வி­னர் பலா­லிக்கு வந்து பார்­வை­யிட்டு சாத்­திய ஆய்வை மேற்­கொண்­ட­னர்.

அந்­தக் குழு­வின் ஆய்வு அறிக்கை தற்­போது கொழும்­பி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. பலாலி விமான நிலை­யத்தை எவ்­வாறு அபி­வி­ருத்தி செய்­ய­லாம் என்­பது உள்­ளிட்ட பல விட­யங்­க­ளும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது.

பலாலி விமா­னத்­த­ளம் பிராந்­திய விமான நிலை­ய­மாக அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டால், சிவில் விமான போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­ச­பை­யின் கீழ் கொண்டு வரப்­பட்டு, சிவில் விமான சேவை­கள் நிறு­வ­னத்­தி­னால் விமான நிலை­யம் இயக்­கப்­ப­ட­லாம்.

பலாலி விமான நிலை­யத்தை விரி­வாக்­கம் செய்­வ­தற்­காக மேல­திக காணி­க­ளைச் சுவீ­க­ரிப்­ப­தற்கு மக்­கள் தொடர்ந்து கடும் எதிர்ப்­புத் தெரி­வித்து வரு­கின்­ற­னர். எனவே ஓடு­பா­தையை விரி­வாக்­கா­மல், பலாலி விமா­னத் தளத்­தைப் பிராந்­திய விமான நிலை­ய­மாக அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள முடி­யும் என்­றும் அறிக்­கை­யில் பரிந்­து­ரைத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது.

எதிர்­கா­லத்­தில் போக்­கு­வ­ரத்து மற்­றும் பெரிய விமா­னங்­க­ளைத் தரை­யி­றக்­கும் வச­தி­க­ளைக் கருத்­தில் கொண்டே, விமான நிலை­யங்­கள் கட்­டப்­ப­டு­கின்­றன. ஆனால் காணி சுவீ­க­ரிப்­புத் தொடர்­பான சர்ச்­சை­கள் தொடர்­வ­தால், பலாலி விமான நிலைய ஓடு­பா­தையை விரி­வாக்­கா­மல் அதனை தர­மு­யர்த்­து­வதே தற்­போ­துள்ள தெரிவு என்று சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­ச­பை­யின் அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பலாலி விமா­னத் தளத்­தின் ஓடு­பாதை 2.3 கிலோ மீற்­றர் நீளம் கொண்­டது. சுமார் 100 பய­ணி­களை ஏற்­றக் கூடிய, போயிங்- 717 உள்­ளிட்ட ஒடுங்­கிய உட­ல­மைப்­பைக் கொண்ட விமா­னங்­களை தர­மு­யர்த்­தப்­பட்ட பின்­னர் தரை­யி­றக்க முடி­யும் என­வும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­தா­கக் தெரி­விக்­கப்­பட்­டது.