புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

சிறப்புற நடந்த செல்வச்சந்நிதி முருகன் தேர்த் திருவிழா!

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான
அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவின் முக்கிய உற்சவமான தேர்த் திருவிழா இன்று காலை பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து, வேல்வடிவில் வீற்றிருக்கும் ஆலய மூலவரான செல்வச் சந்நிதி முருகன், ஆறுமுக சுவாமி, மற்றும் விநாயகப் பெருமான் ஆகியோர் தனித்தனித் தேர்களில் உலா வந்தனர்.
வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவின் முக்கிய உற்சவமான தேர்த் திருவிழா இன்று காலை பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து, வேல்வடிவில் வீற்றிருக்கும் ஆலய மூலவரான செல்வச் சந்நிதி முருகன், ஆறுமுக சுவாமி, மற்றும் விநாயகப் பெருமான் ஆகியோர் தனித்தனித் தேர்களில் உலா வந்தனர்.

யாழ். குடாநாட்டில் இருந்து மட்டுமன்றி, இலங்கைத் தீவின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான அடியார்கள் இந்த தேர்த் திருவிழாவில் பங்கேற்றனர். நாளை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.