தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

மாம்பழம் பறிக்க முயன்றவர் கீழே விழுந்ததில் உயிரிழப்பு

மாம்பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறி விழுந்து காயமடைந்த குடும்பத் தலைவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இமையான் மேற்கு உடுப்பிட்டியை சேர்ந்த இராசையா பத்மநாதன்(வயது 57)என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி தனது வளவினுள் உள்ள மாமரத்தில் ஏறி மாம்பழம் பறிக்க அவர் முயற்சித்துள்ளார். மரக் கொப்பு முறிந்ததில் கீழே விழுந்த அவர் மயக்கமடைந்தார். தேடி வந்த அவரது மனைவி கணவன் கீழே வீழ்ந்து மயக்கமடைந்து கிடப்பதை கண்டு உடனடியாக மந்திகை வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனைக்கு மாற்றப்பட்டார்.

நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.