புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

வடக்கில் பாதீனியத்தை அழிக்காதோர் மீது பாய்கிறது சட்டம்! - சோதனைக்கு தயாராகிறது படையணி

வடக்கு மாகா­ணத்­தில் பாதீனியச் செடியை அழிக்­கா­துள்­ளோர் மீது சட்­ட­ந­ட­வ­டிக்­கையை தொடர்­வ­தற்­காக தெரிவு செய்­யப்­பட்ட ஒரு தொகுதி உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான பயிற்­சி­கள் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. விரை­வில் அவர்­கள் வீடு வீடா­கச் சென்று ஆராய்வு சட்­ட­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பர் என­வும் தெரி­ய­வ­ரு­கி­றது.
வடக்கு மாகா­ணத்­தில் பாதீனியச் செடியை அழிக்­கா­துள்­ளோர் மீது சட்­ட­ந­ட­வ­டிக்­கையை தொடர்­வ­தற்­காக தெரிவு செய்­யப்­பட்ட ஒரு தொகுதி உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான பயிற்­சி­கள் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. விரை­வில் அவர்­கள் வீடு வீடா­கச் சென்று ஆராய்வு சட்­ட­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பர் என­வும் தெரி­ய­வ­ரு­கி­றது.

வடக்கு மாகா­ணத்­தில் பெரு­கி­வ­ரும் பாதீனியச் செடி­களை அழிப்­ப­தற்­கு­ரிய சட்­ட­ந­ட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கென மாகா­ணத்­தின் பல்­வேறு திணைக்­க­ளங்­க­ளை­யும் சேர்ந்த அலு­வ­லர்­கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். எனி­னும் அவர்­கள் நிய­மிக்­கப்­பட்டு பல காலங்­கள் கடந்­த­போ­தும் பாதீனியச் செடியின் வளர்ச்­சி­யின் தாக்­கத்­தைத் தடுப்­ப­தில் இன்­று­வரை எந்­த­வி­த­மான முன்­னேற்­ற­மும் நடந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

பாதீனியச் செடி விவ­சா­யத்­துக்­கும், உடல் நலத்­துக்­கும், சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். இது வடக்கு மாகா­ணத்­தில் பர­வ­ல­டைந்து தனது ஆதிக்­கத்­தைச் செலுத்தி வரு­கின்­றது. பாதீ­னி­யச் செடி­களை அழித்­தல் தொடர்­பான அறி­விப்­புப் பல­கை­கள் வைக்­கப்­பட்­டுள்ள இடங்­க­ளி­லும் இந்­தச் செடி­யின் வளர்ச்சி பரந்து காணப்­ப­டு­கி­றது. பார்தீ­னி­யம் தொடர்­பாக பொது­மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நோக்­கி­லும்,பார்தீ­னி­யத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கி­லும் வடக்கு மாகாண விவ­சாய அமைச்சு பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வந்­தது.

எனி­னும் இன்­று­வரை அத­னைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சிறந்த நட­வ­டிக்­கைள் எடுக்­கப்­ப­ட­வில்லை என விவ­சா­யி­கள் கவ­லை­ அ­டைந்­த­னர். பாதீனியச் செடிகளை அழிக்­கத் தவ­று­ப­வர்­கள் மீதான சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் நோக்­கில் விவ­சா­யத் திணைக்­க­ளம், கால்­நடை உற்­பத்தி சுகா­தா­ரத் திணைக்­க­ளம், நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம், உள்­ளூ­ராட்­சித் திணைக்­க­ளம், கம­ந­ல­சே­வைத் திணைக்­க­ளம் ஆகிய திணைக்­க­ளங்­க­ளில் இருந்து அலு­வ­லர்­கள் தெரி­வு­செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்குக் கொழும்பு விவ­சா­யத் திணைக்­க ளத்­தின் செய­லா­ளர் நாய­கத்­தி­னால் அதி­கா­ரம் அளிக்­கப்­பட்டு, நிய­ம­னக் கடி­தங்­க­ளும் வழங்­கப்­பட்­டன.

பாதீனியச் செடிகளை அழிப்­பது தொடர்­பாக உரி­யவர்­க­ளுக்கு வாய்­மூ­ல­மா­க­வும்,­­ கடி­தங்­கள் மூல­மா­க­வும் அறி­வித்­தல்­கள் வழங்­கப்­ப­டும்.இரு வாரங்­கள் கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டும். அவற்­றை­யும் மீறி இந்­தக் களை­களை அழிக்­கத் தவ­று­ப­வர்­க­ளுக்கு, தாவ­ரப் பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் ஒரு­மா­தத்­துக்­குக் குறை­யாத ஆறு­மா­தங்­க­ளுக்கு மேற்­ப­டாத சிறைத்­தண்­ட­னையை வழங்க முடி­யும். அல்­லது, அவ­ரி­டம் இருந்து 10 ஆயி­ரம் ரூபா­வுக்­குக் குறை­யாத ஒரு­இ­லட்­சம் ரூபா­வுக்கு மேற்­ப­டாத தண்­டப்­ப­ணத்தை அற­வி­ட­மு­டி­யும்.

அல்­லது, இரண்டு தண்­ட­னை­க­ளை­யுமே விதிக்­க­மு­டி­யும். என சட்ட விதி­யும் கூறப்­பட்­டி­ருந்­தது. எனி­னும் இன்­று­வரை அது இயங்­கி­ய­தாக அறிய முடி­ய­வில்லை. இது தொடர்­பாக வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சின் அதி­கா­ரி­க­ளைக் கேட்­ட­போது அவர்­கள் தெரி­வித்­த­தா­வது; ”வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சி­னால் உரு­வாக்­கப்­பட்ட பார்தி­னிய ஒழிப்­புக் குழு­வில் சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­காக ஒரு தொகை உத்­தி­யோ­கத்­தர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­கள் எவ்­வா­றன கட­மை­க­ளைச் செய்ய வேண்­டும் அவர்­க­ளின் கடமை என்ன என்­பது தொடர்­பா­கன பயிற்­சிப் பட்­டறை விரை­வில் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளன, பயிற்சி நெறி­யின் பின்­னர் டெங்கு நோய் பர­வும் அபா­யத்தை உண்­டாக்­கு­ப­வர்­க­ளுக்கு எவ்­வாறு சுகா­தா­ரப் பிரி­வி­ன­ரால் வீடு வீடா­கச் சென்று குற்­றப்­ப­ணம் அடிக்­கப்­ப­டு­கின்­றதோ அது போலவே ஒவ்­வொரு பிர­தே­சங்­க­ளுக்­கும் சென்று இந்த உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் பார்தீ­னி­யச் செடி­களைக் கட்­டுப்­ப­டுத்­தா­தோர் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­னர் என்­ற­னர்.