வெள்ளி, செப்டம்பர் 01, 2017

பொருத்து வீட்டு வழக்கை திரும்பப்பெற்றது கூட்டமைப்பு

பொருத்து வீடு­களை வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் அமைப்­ப­தற்கு தடை விதிக்­கக் கோரி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின்
நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்தி­ரன் உயர் நீதி­மன்­றில் ஜூலை மாதம் 13ஆம் திகதி தாக்­கல் செய்த வழக்கை, அவர் நேற்று மீளப் பெற்­றுக் கொண்­டுள்­ளார்.
‘மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன், பொருத்து வீடு­களை அமைக்க திட்­ட­மிட்­டுள்ள ஆர்­சி­லோன் மிட்­டல் நிறு­வ­னம், சட்­டமா அதி­பர் ஆகி­யோர் பிர­தி­வா­தி­க­ளா­கக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­னர்.
இவர்­க­ளு­டன் அமைச்­ச­ர­வை­யை­யும் பிர­தி­வா­தி­க­ளா­கக் குறிப்­பிட்டு மீள வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டும்’ என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.
‘பொருத்து வீடு வடக்கு – கிழக்கு கால­நி­லைக்­குப் பொருத்­த­மில்லை. 65 ஆயி­ரம் பொருத்து வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு கேள்வி – கோரல் நடத்­தி­ய­தன் அடிப்­ப­டை­யி­லேயே 6 ஆயி­ரம் பொருத்து வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது. இது பிழை­யான நட­வ­டிக்கை’ என்று மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.
பொருத்து வீடு தொடர்­பான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யும் மேற்­கொண்டு எடுப்­ப­தற்கு தடை விதிக்க மனு­வில் கோரப்­பட்­டி­ருந்­தது.
இந்த வழக்கு உயர் நீதி­மன்­றில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி, அமைச்­ச­ர­வை­யின் பொரு­ளா­தார உப­குழு ஆர்­சி­லோன் மிட்­டல் நிறு­வ­னத்­துக்கே பொருத்து வீடு அமைக்க ஒப்­பந்­தம் வழங்க வேண்­டும் என்று அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அந்த நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.
மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் சட்­டத்­த­ர­ணி­யால் முன்­வைக்­கப்­பட்ட அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் தனக்கு இது­வரை கிடைக்­க­வில்லை என்று கூறிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அரச தலை­வர் சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன், வழக்கை மீளப் பெற்­றுக் கொள்­வ­தா­கத் தெரி­வித்­தார்.
பிர­தி­வா­தி­கள் பட்­டி­ய­லில் அமைச்­ச­ர­வை­யை­யும் இணைத்து மீண்­டும் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டும் என்று அவர் மேலும் குறிப்­பிட்­டார்.