சனி, செப்டம்பர் 09, 2017

தேசிய மட்ட வீரதீர விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் கிளிநொச்சி வீராங்கனை தமிழ்மகள்

43 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் டை கெண்டோ போட்டியில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர். தமிழ்மகள் தங்கப் பதக்கம்
பெற்று சாதனை படைத்துள்ளார். கொழும்பு, ரொரிங்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற 43 வது தேசிய விளையாட்டு விழாவில் டை கெண்டோ போட்டியில் 57-62 கிலோகிராம் நிறைப் பிரிவில் வடமாகாணத்தின் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர். தமிழ்மகள் தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டார்.
43 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் டை கெண்டோ போட்டியில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர். தமிழ்மகள் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். கொழும்பு, ரொரிங்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற 43 வது தேசிய விளையாட்டு விழாவில் டை கெண்டோ போட்டியில் 57-62 கிலோகிராம் நிறைப் பிரிவில் வடமாகாணத்தின் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர். தமிழ்மகள் தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டார்.

இவர் மேல் மாகாணத்தை சேர்ந்த வீராங்கனையுடன் 28:17 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி ஈட்டிக் கொண்டார். விளையாட்டு திணைக்களத்தினால் தேசிய ரீதியாக திறந்த முறையில் நடந்த படும் மாஷல் ஆட் (வீர விளையாட்டு) போட்டிகளில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழர்கள் நீண்ட காலம் தங்கப்பதக்கம் பெறவில்லை. பெண்கள் தரப்பில் தேசிய ரீதியிலான மாஷல் ஆட் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற தமிழ் பெண் ஆர்.தமிழ்மகள் ஆவார்.