புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, செப்டம்பர் 15, 2017

டி.டி.வி தினகரன் பொதுக்கூட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

நீட் தேர்வுக்கு எதிரான வரும் 19-ம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் விளக்க பொதுக்கூட்டத்தை
தினகரன் ஆதரவாளர்கள் நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு காவல்துறையிலிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. அம்மா அணியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ஸ்ரீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'எங்கள் அணியின் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து விளக்கப் பொதுக்கூட்டத்தை, வருகிற 19-ம் தேதி  திருச்சி உழவர் சந்தை அருகே நடத்த திட்டமிட்டிருந்தோம். அதற்கு அனுமதி வழங்கக்கோரி, திருச்சி காவல் துறையினரிடம் மனு  அளித்தோம். ஆனால், பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கியோ மறுத்தோ எவ்வித பதிலும் காவல்துறை தரப்பில் வழங்கப்படவில்லை. எனவே, அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில், 19-ம் தேதி திருச்சி உழவர் சந்தைப் பகுதியில் காவல்துறை பாதுகாப்போடு பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.