புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

எளிய' அமைப்பை நாளை தொடங்குகிறார் கோத்தா

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவின் தலை­மையில்
முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவின் தலை­மையில் "எளிய" (வெளிச்சம்) எனும் புதிய அமைப்­பு நாளை உத­ய­மா­கின்­றது. இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை பொர­லஸ்­க­மு­வையில் இடம்­பெ­ற­வுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட பொது எதி­ர­ணியின் பலர் இந்த நிகழ்வில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவின் அர­சியல் பிர­வேசம் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் பரி­மாற்­ற­பட்டு வரும் நிலையில் "எளிய" எனும் பெயரில் அவர் புதிய அமைப்­பொன்றை உரு­வாக்­க­வுள்ளார். கோத்­த­பாய ராஜ­பக்ஷ தலைமை தாங்கும் இந்த அமைப்பில் பல்­வேறு அர­சியல் மற்றும் சிவில் பிர­மு­கர்கள் அங்கம் வகிக்­கின்­றனர். இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை 6 ஆம் திகதி பொர­லஸ்­க­முவை பிர­தே­சத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. இது அவ­ரது அடுத்­த­கட்ட நகர்­வா­கவும் அர­சி­யலில் தன்னை இணைத்­துக்­கொள்ளும் ஆரம்ப நகர்­வாகும் அமையும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அத­போன்று சகல இலங்கை பிர­ஜை­க­ளி­னதும் எதிர்­பார்ப்­பு­களை ஒளி­யேற்றும் நோக்­கத்தில் ஏற்­றப்­படும் தீபம் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பொது எதிரணி உறுப்பினர்களும் ஏனைய பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது