புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

’’என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே...’’ என்ற அந்த குரல் மீண்டும் ஒலிக்கும்: வைகோ

முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் இன்று மாலை ஓ.எம்.ஆர். சாலை, கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது.  பேராசிரியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர்.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது,
’’அண்ணன் கலைஞர் அவர்களே,  எண்ணற்ற முறையில் நீங்கள் மேடையில் அமர்ந்திருக்கின்ற வேளையில் நான் உரையாற்றியிருக்கின்றேன்.  உங்களின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறேன்.  உங்கள் கண்கள் கலங்கியதை கண்டிருக்கிறேன்.   இன்றும் நீங்கள் இந்த மேடையில் இருப்பதாகவே மானசீகமாக கருதிக்கொண்டு பேசுகிறேன்.   கோபாலபுரத்திலே உடல்நலம்பெற்று,  ‘’என் உயிருனும் மேலான உடன்பிறப்புகளே...’’ என்ற அந்த குரல் மீண்டும் ஒலிக்கும்.   அந்த நம்பிக்கையோடு பேசுகிறேன்.   

அண்ணன் கலைஞர் அவர்களே, முரசொலிக்கு நூற்றாண்டு விழா நடக்கின்ற போதும்  உலகம் எங்கிலும் இருந்து வந்து தமிழர்கள் வாழ்த்துவார்கள்.   நீங்கள் நூறாண்டு கடந்து பன்னூரு அகவை கண்டு நலமோடு வாழவேண்டும்.  மீண்டும் நீங்கள் உரையாற்றுவதை தமிழ்ச்சமூகம் காணவேண்டும்.  நலமோடு வாழ்க. முரசொலி வாழ்க.  வணக்கம்.’’என்று குறிப்பிட்டார்.