சனி, செப்டம்பர் 02, 2017

மூத்த ஊடகவியலாளர் குருநாதன் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று காலை திருகோணமலையில் காலமானார். அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 79ஆவது வயதில் இன்று காலமானார். இவர், 55வருடங்களுக்கு மேலாக ஊடகங்களில் பணியாற்றிவர். தமிழ்,ஆங்கில நாளிதழ்களிலும், இணையத்தளங்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

யுத்த காலப்பகுதியில் நெருக்கடிகளைச்சந்தித்து போதிலும், ஊடகப்பணியை முழுநேரமாக மேற்கொண்டிருந்தவர். பல விருதுகளைப்பெற்ற மூத்த ஊடகவியலாளர் குருநாதன், வாழ்நாள் சாதனையாளராகவும் திகழ்ந்தார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திருகோணமலை பிரதான வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற வுள்ளன.