தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

கனடியப் பிரதமரைக் கவர்ந்த கொத்து ரொட்டி

இலங்கை உணவான கொத்து ரொட்டி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கவர்ந்த உணவாக இருப்பதாக கனடிய
ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொரொன்டோவின் மிகப்பெரிய தெரு விழாக்களில் ஒன்றான தமிழ் திருவிழா நடைபெற்றது. 200,000 பேரின் பங்களிப்புடன் நடைபெற்ற திருவிழாவுக்கு கனடிய பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கை உணவான கொத்து ரொட்டி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கவர்ந்த உணவாக இருப்பதாக கனடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொரொன்டோவின் மிகப்பெரிய தெரு விழாக்களில் ஒன்றான தமிழ் திருவிழா நடைபெற்றது. 200,000 பேரின் பங்களிப்புடன் நடைபெற்ற திருவிழாவுக்கு கனடிய பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Scarborough, Markham தெருவில் மக்கள் கூட்டத்தில் மத்தியில் சமைக்கப்பட்ட பல தமிழ் உணவுகளில் ஒன்றை சுட்டிக்காட்டி “கொத்து ரொட்டி சிறப்பாக வருவதனை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என கனடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் குடியேறிய Newfoundland பகுதிக்கு கனடிய பிரதமர் சென்றுள்ளார். தமிழர்களுக்கும் இலங்கை தீவின் சிங்கள பெரும்பான்மைக்கும் இடையிலான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போதிலும், 2010 ஆம் ஆண்டு கனடாவின் கரையோரங்களில் தஞ்சம் கோருவோர்களின் கப்பல்களின் வருகை அதிகரித்தது. எனினும் இலங்கை நீண்டகால சமாதானத்தை இன்னும் அடைந்துவிடவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டு நாள் கொண்டாட்டத்தின் போது தமிழ் கனடிய சமூகத்தின் சாதனைகளுக்கு கனேடிய அரசியல்வாதிகளும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
    .