ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

கொரிய ஓப்பன் பேட்மின்டன்சாம்பியன் சிந்து

ற்போது, கொரிய ஓப்பன் தொடரில் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நசோமியை எதிர்கொண்டார் பி.வி.சிந்து. சில
நாள்களுக்கு முன்னர் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை நசோமியிடம் இழந்த சிந்து, இன்றைய போட்டியில் நசோமியை வென்று கொரிய ஓப்பன் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இத்தொடரில் பெண்கள் ஒற்றையரில் போட்டியிட்ட சிந்து, ஜப்பானின் நசோமியை 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டார். இதன் மூலம் கொரியத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெறுகிறார் சிந்து