புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், செப்டம்பர் 07, 2017

கூட்டமைப்பு சமர்ப்பித்த யோசனை என்னவென்று தெரியாது! - சித்தார்த்தன்

ரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக மைத்திரி ஒருபுறமும் ரணில் இன்னொரு புறமுமாக ஆலோசனை குழுக்களை அமைத்துள்ளனர். இவற்றிற்கு மேலதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பரிந்துரை அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அதில் என்ன இருக்கின்றதென்பது பங்காளிகளான எமக்கு எவருக்குமே தெரியாது என்று புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக மைத்திரி ஒருபுறமும் ரணில் இன்னொரு புறமுமாக ஆலோசனை குழுக்களை அமைத்துள்ளனர். இவற்றிற்கு மேலதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பரிந்துரை அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அதில் என்ன இருக்கின்றதென்பது பங்காளிகளான எமக்கு எவருக்குமே தெரியாது என்று புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மறுபுறம் அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கு கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடும் தர்க்கத்துடனேயே வாதிடுவதனை தான் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தற்போது புதிதாக கொண்டுவர முயற்சிக்கும் தொகுதிவாரியான தேர்தல்கள் பெரும்பான்மைக் கட்சிகள் சிறுபான்மையினரில் தங்கி நிற்கும் நிலமையை இல்லாது செய்யும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது. அதேநேரம் இந்த நாட்டில் நாம் சமஸ்டிக் கோரிக்கையுடனேயே 40 ஆண்டுகாலமாக காத்திருக்கின்றோம். அதேபோன்று இந்த 40 ஆண்டுகளும் சிங்கள மக்கள் ஒற்றையாட்சிக்குள் வாழ்கின்றனர் அதற்கே வாக்களிக்கின்றனர். அவ்வாறானால் எவ்வாறு ஓர் நிலமையை எட்டுவது என்பதும் சவாலாகவே உள்ளது.

இதேநேரம் இன்னும் 10 தினங்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைக்குழுவின் அறிக்கை ஆராயப்பட்டு அரசியல் அமைப்பு சபையில் நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் நாடாளுமன்றிற்கு கொண்டு சென்று அங்கும் நிறைவேறினால் மக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டும். இதேநேரம் இந்த நாட்டில் வரும் அரசியல் தீர்வானது சிங்கள மக்களினது சம்மத்த்துடனும் வரும் தீர்வே நிலைக்கும் என சம்பந்தர் நம்புகின்றார். இது வருமா அல்லது வராதா என எனக்குத் தெரியாது. ஏற்கனவே இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இவற்றையெல்லாம் தாண்டி அரசியல் யாப்பு அமுலுக்கு வர இன்னமும் மூன்றாண்டுகாலம் தேவை. அப்போதும் இந்த ஆட்சி இருக்குமா என்பதும் தெரியாது என்றார்.