திங்கள், செப்டம்பர் 11, 2017

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான சாட்சியாக மாறுவார் சரத் பொன்சேகா! - அரசுக்கு எச்சரிக்கை

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்டு வரும் கருத்துக்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக செயற்படும் தரப்பினருக்கு முக்கியமான சாட்சியமாக அமையும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா எச்சரித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போரில் நேரடியான தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர் வெளியிடும் கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை. உலகில் எந்த ஒரு இராணுவத் தளபதியும் இப்படியான கருத்துக்களை வெளியிட்டதில்லை. உண்மை மற்றும் தகவல்களை கண்டறியும் ஆணைக்குழுவை துரிதமாக நியமிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்