புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

மீண்டும் நாற்காலிக்கு உயிர் கொடுக்க சந்திரிகா முயற்சி

எதிர்வரும் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளை இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ், நாற்காலி சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இது சம்பந்தமான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் சில உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளை இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ், நாற்காலி சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இது சம்பந்தமான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் சில உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர்கள் மகிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, விஜித் விஜயமுனி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அதாவுத செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்ட நடவடிக்கை குழுக் கூட்டம் ஒன்றும் அண்மையில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தின் குழு அறையில் நடந்துள்ளது.

கடந்த 1994 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணியின் நாற்காலி சின்னத்தில் போட்டியிட்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் இனவாத மற்றும் மதவாத கட்சிகளை கூட்டணியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வந்த கட்சியின் சிரேஷ்ட தொகுதி அமைப்பாளர்கள் நாற்காலி சின்னத்தில் போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளனர். ஊழல்வாதிகள், அடிப்படைவாதிகள் நீக்கப்பட வேண்டும் என்பது இவர்களின் அடிப்படை கோரிக்கையாக உள்ளது. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சில சிரேஷ்ட உறுப்பினர்களும் நாற்காலி சின்னத்தில் போட்டியிட இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சில நடவடிக்கைகளுக்கு பண ரீதியான உதவிகளை செய்திருந்தமை முக்கிய அம்சமாகும்.இதற்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் விரிவான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் கிராம மட்டத்தில் கட்சியின் கிளையை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.