திங்கள், செப்டம்பர் 11, 2017

கைவிடப்பட்டுள்ள விவசாயகாணிகளை கைப்பற்ற அரசாங்கம் நடவடிக்கை

விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள தனியார் காணிகளை அரசுடைமையாக்கி அங்கு விவசாயத்தை மேற்கொள்ள கூடிய வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாரிய அளவிலான தனியார் காணிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக சிறிசேன தெரிவித்தார். உரிமையாளர்களுக்கு முதலில் உத்தரவிடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன அதனை மீறும் நபர்களின் தனியார் காணிகளே அரச மயப்படுத்தப்படும் என்று கூறினார். திம்புலாகளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

தற்போது இலங்கையில் உணவு உற்பத்திகளை அதிகரிக்க செய்யும் பாரிய அவசியமொன்று ஏற்பட்டுள்ளதாக கூறிய ஜனாதிபதி விவசாயத்தை ஊக்கி வைப்பதன் மூலம் மாத்திரமே அதனை சாதிக்க முடியுமென்று தெரிவித்தார். இதன் காரணமாக சகல காணிகளையும் விவசாய நடவடிக்கிகளில் ஈடுபடுத்துவது மிக அவசியமென்று அவர் கூறினார்.