புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

ஒரு போராளியை இழந்து நிற்கிறோம்:வைரமுத்து

மாணவி அனிதா மரணம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:

‘அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன. ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

மொத்தம் மரணம் மூன்று வகை.

இயல்பான மரணம்-அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு;

இன்னொன்று கொலை-அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு;

மூன்றாவது தற்கொலை-அது மனிதன் சமூகத்தின் மீது காட்டும் எதிர்ப்பு.

அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது?

தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது? தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு.’’