புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமனம்!
வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று காலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது.

இதையடுத்து வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இன்று காலை கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திரா காந்திக்கு பிறகு இந்தியாவின் 2வது பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.