செவ்வாய், செப்டம்பர் 05, 2017

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் அமைதிப்பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், அவர்களுக்காக போராட்டம் நடத்தும் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,


வவுனியாவில் அமைதிப்பேரணி ஒன்று, இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், அவர்களுக்காக போராட்டம் நடத்தும் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வவுனியாவில் அமைதிப்பேரணி ஒன்று, இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

கிராமிய பெண்கள் அமைப்பு, கிராம முகாமைத்துவ சம்மேளனம், சர்வமதக்குழுக்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியலயத்துக்கு முன்னால் ஆரம்பமான இந்த அமைதிப்பேரணி, வவுனியா பொது வைத்தியசாலை சந்தியை வந்தடைந்து, அங்கிருந்து பசார் வீதி வழியாக காணாமல் ஆக்கப்பட்ட உறுவுகளின் தாய்மார்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் வவுனியா தபால் கந்தோர் முன்பாகவுள்ள கொட்டகையை வந்தடைந்தது.

அமைதிப்பேரணியின் முடிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கிராமிய பெண்கள் அமைப்பு மற்றும் சர்வமத குருமாரால் ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.