வெள்ளி, செப்டம்பர் 01, 2017

பங்களாதேஷுடம் அடைக்கலம் கோரும் ரோகிங்கயாக்கள்


டந்த 6 நாட்களில் பங்களாதேஷுக்கு சுமார் 18 ஆயிரத்து 500 ரோகிங்கயாக்கள் அடைக்கலம் கோரி சென்றுள்ளனர்.

சுகயீனமுற்று, குண்டடிப்பட்ட காயங்களுடனே இவ்வாறு ரோகிங்யா முஸ்லிம்கள் சென்றுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
பன்னாட்டுச் சமூகத்தின் பெரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த புள்ளிவிபரத்தை இடம்பெயர்வோருக்கான பன்னாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 5ம் திகதி மியன்மாரின் ராககைன் மாநிலத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஆயுதம் ஏந்திய குழுவினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ரோகிங்யாக்கள் வசிக்கும் பிரதேசங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் 110 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.