செவ்வாய், செப்டம்பர் 12, 2017

ஹிந்தவையும் கைது செய்ய வேண்டும்! - சரத் பொன்சேகா

சில் துணி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் கைது செய்ய வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டதில் எந்த தவறும் கிடையாது. முன்னாள் ஆட்சியாளர்களின் உத்தரவிற்கிணங்க செயற்பட்டதாலே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஆட்சியாளர்கள் சொன்னதற்காக யாரையாவது பாலியல் வல்லுறவு செய்திருந்தால் அதை மன்னிக்க முடியுமா?

குறித்த மோசடிக்கு காரணமான மஹிந்த ராஜபக்ஷவையும் கைது செய்ய வேண்டும். இவர்களுக்கு நீதி மன்ற அபராதத்தை செலுத்த பணம் சேகரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சில் துணி ஒன்றின் விலை 15 டொலராக இருந்தாலும் அதற்கான விலை 50 டொலர் என்று குறிப்பிட்டே 600 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் மோசடி செய்த பெருமளவு பணம் இருக்கும் .அபராதத்தை செலுத்துவது இவர்களுக்கு பிரச்சினை கிடையாது எனவும் அவர் கூறினார்.