வியாழன், செப்டம்பர் 07, 2017

காணாமல் போனோர் பற்றிய விபரங்கள் எதுவும் இல்லை! - கைவிரித்தார் ஜனாதிபதி

காணாமல் போனவர்கள் தொடர்பான பெயர் பட்டியல்களோ, அவர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் தங்களிடம் இல்லையென
.
முப்படையினர் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான பெயர் பட்டியல்களோ, அவர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் தங்களிடம் இல்லையென முப்படையினர் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

இதில் காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ , தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால, காணாமல் போனவர்கள் தொடர்பான பெயர் பட்டியல்களோ, தகவல்களோ எதுவும் தங்களிடம் இல்லையென முப்படையினரும் எங்களிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.