புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

காணாமல் போனோரின் உறவுகளை நாளை சந்திக்கிறார் ஜனாதிபதி!


காணாமல் போனோரின் உறவுகளை  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நாளை ஜனாதிபதி மாளிகையில் சந்திக்கவுள்ளார். வடக்கு மாகாணத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா ஒருவர் வீதம் இந்தச் சந்திப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 தேர்வு செய்யப்பட்டவர்கள் மாவட்டச் செயலகங்களின் ஏற்பாட்டில் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இவர்களுக்கான தேர்வு மற்றும் பயண ஒழுங்குகள் அனைத்தும் மாவட்டச் செயலகங்களே முன்னெடுக்கின்றன.
காணாமல் போனோரின் உறவுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஜனாதிபதி மாளிகையில் சந்திக்கவுள்ளார். வடக்கு மாகாணத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா ஒருவர் வீதம் இந்தச் சந்திப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் மாவட்டச் செயலகங்களின் ஏற்பாட்டில் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கான தேர்வு மற்றும் பயண ஒழுங்குகள் அனைத்தும் மாவட்டச் செயலகங்களே முன்னெடுக்கின்றன.


காணாமல் போனோரின் உறவுகள் கடந்த 200 நாட்களாக தமது உறவுகளின் நிலையைத் தெரிவிக்குமாறு கோரி யாழ் மருதங்கேணி , கிளிநொச்சி , முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங்களில் போராட்டம் நடாத்தி வரும் சூழலில் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.