திங்கள், செப்டம்பர் 11, 2017

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பதற்கு, உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாகாண சபையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை ஒத்திவைப்பதனால், மாகாண சபையில் பிரச்சினையான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை அடிப்படையாக வைத்தே, சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

முதலமைச்சரின் செயற்பாட்டினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும், அதிருப்தியில் இருப்பதாகவும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கமுடியாமல் அவர்கள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது என்றும் அந்த தகவல் தெரிவித்தது.