தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, செப்டம்பர் 02, 2017

முன்னாள் எம்.பி தர்மலிங்கம் நினைவு நாள்! - தாவடியில் அனுஷ்டிப்பு

தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில்-மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற .
உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில்-மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தார்த்தன் , நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன், விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன், எதிர்கட்சித்தலைவர் சி.தவராசா , மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் , கேசவன் சயந்தன் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு அவரது தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.