தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

காட்டிக் கொடுத்து விட்டார் பொன்சேகா – குமுறுகின்றார் விமல்

இராணுவம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவால் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்தாவது-

பொன்சோகாவுக்குக் கீழ் பணியாற்றிய இராணுவ வீரர்களை அவர் காட்டிக்கொடுத்து விட்டார். இராணுவத்தினர் அரசியல் வேறுபாடுகளின்றி நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக போராடியவர்கள்.- என்றார்