வெள்ளி, செப்டம்பர் 08, 2017

கொட்டும் மழை - படகுகளுடன் இராணுவம் தயார் நிலையில்

    இரத்தினபுரியில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக, இரத்தினபுரி நகரை அண்மித்த முந்துவ, கெடங்கம, வெரலுப்ப உட்பட மேலும் சில பகுதிகளிலுள்ள
    தாழ்நிலங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், குருவிட்ட இராணுவ முகாமிலிருந்து படகுகளுடன் இராணுவத்தினர், இரத்தினபுரி நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, எலபாத்தை, எஹலியகொட, குருவிட்ட மற்றும் அயகம கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.