புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

மாயக்கல்லி மலையில் மீண்டும் பதற்றம்!

அம்பாறை- இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் சிலர் மீண்டும் சட்ட விரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதை அடுத்து அங்கு மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. பௌத்த மத குருமார்கள் சிலரும், பௌத்த மக்களும் இணைந்து, தமிழ் நபரிடம் இருந்து காணியொன்றைக் கொள்வனவு செய்து, அதில் சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைக்க முயற்சிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண அமைச்சர், ஏ.எல்.மொஹ்மட் நஸீர் ஆகியோர் நேரில் சென்றுள்ளனர் என்றும், இது தொடர்பில் ஜனாதிபதியின் நேரடி கவனத்துக்குக் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகின்றது.