சனி, செப்டம்பர் 09, 2017

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை கோடரியால் வெட்டிக் கொன்ற உறவினர்கள்! - மூவர் கைது

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உறவினர்களால் கோடரியால் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வவுனியா ஓமந்தை கிழவிகுளம் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் குடும்பத் தகராறு கைகலப்பாக மாறியதால் உறவினர்கள் சேர்ந்து கோடரியால் தலையில் வெட்டியதில் 30 வயதுடைய பாலையா சுதாகரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா கிழவிகுளம் பகுதியை சேர்ந்த உறவினர்களான ஜெயசீலன் தவபாலன், சிவபாலன் சிவகுமார் ,சிவபாலன் சுபாஷினி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.