புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், செப்டம்பர் 06, 2017

சென்.ஜோன்ஸ் மகுடம் சூடியது On 14 hours ago

பிரிட்­டன் தமிழ் கிரிக்­கெட் லீக்­கின் அனு­ச­ர­ணை­யு­டன் யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­க­ளின் துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­திய ரி-–20 துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.o
சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று பிற்­ப­கல் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப் பா­ணம் மத்­திய கல்­லூரி அணி
யை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி மோதி­யது.
நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி முத­லில் களத்­த­டுப்­பைத் தெரி­வு­செய்­தது. இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 9 இலக்­கு­களை இழந்து 104 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக செரோ­பன் 25 ஓட்­டங்­க­ளை­யும், டினோ­சன் 16 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.
பந்­து­வீச்­சில் மது­சன் 3 இலக்­கு­ க­ளை­யும், இய­ல­ர­சன், குக­ச­துஸ் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.
105 ஒட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 20 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 8 இலக்­கு­களை இழந்து 85 ஓட்­டங் களை மட்­டுமே பெற்­றது. இத­னால் 19 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது சென். ஜோன்ஸ். அதி­க­பட்­ச­மாக நிது­சன் 23 ஓட்­டங்­க­ளைப் பெற்­றுக் கொடுத்­தார்.
பந்­து­வீச்­சில் கபில்­ராஜ், அபி­னாஸ், சுபிட்­சன் மூவ­ரும் தலா 2 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னர்.
சிறந்த துடுப்­பாட்ட வீர­னாக சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி­யின் செரோ­பன், சிறந்த பந்து வீச்­சா­ள­ ராக யாழ்ப்­பாண மத்­திய கல்­லூரி அணி­யின் மது­சன், சிறந்த களத்­த­டுப்­பா­ள­ராக சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி­யின் சௌமி­யன்.
ஆட்ட நாய­க­னாக சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி­யின் கபில் ராஜ், சகல துறை வீர­ராக சென். ஜோன்ஸ் அணி­யின் சுபிட்­சன் ஆகி­யோர் தெரி­வா­கி­னர்