www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 09, 2017

டிடிவி தினகரன், திவாகரன் வீடுகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை..!



சசிகலா, தினகரன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீடு

சென்னையில் அடையாறில் உள்ள டிடிவிதினகரனின் வீடு, சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான மால்கள், திவாகரன், இளவரசியின் மகள் வீடு, இளவரசியின் மகன் நடத்தி வரும் நிறுவனம், தஞ்சையில் உள்ள தினகரனின் மாமனார் சுந்தரவதனத்தின் வீடு, மன்னார்குடியில் உள்ள திவாகரனின் வீடு, தஞ்சையில் உள்ள மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடு, திருச்சியில் உள்ள இளவரசியின் சம்பந்தி கலியபெருமாள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை போயஸ் கார்டனிலுள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.