www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், நவம்பர் 08, 2017

வடக்கு கிழக்கு மாகாணங்களில் 7 மாவட்ட நீதிபதிகளுக்கு வருடாந்த இடம்மாற்றம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் 7 மாவட்ட நீதிபதிகளுக்கு வருடாந்த இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம்மாற்றம் 2018 ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் , வவுனியா மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் கல்முனை மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் பெறுகின்றனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடின் மூதூர் மாவட்ட நீதிபதியாகவும் மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கல்முனை மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் பெறுகின்றனர். மட்டக்களப்பு நீதிவான் எம்.கணேசராஜா, மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் பெறுகின்றனர்.