www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வியாழன், நவம்பர் 09, 2017

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல்

யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தினரால், கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை, விடுவிக்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தினரால், கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை, விடுவிக்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இந்த பன்னிரன்டு மனுக்களில் ஒன்பது பேரது மனுக்கள் ஏற்கனவே அநுராதபுரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ள நிலையில் அவ் ஒன்பது மனுக்களையும் நிராகரித்து ஏனைய மூன்று வழக்குகள் மீதான விசாரணையையும் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

இன்றைய தினம் மன்றில் சட்டத்தரணி சுபாஜினி கிஷோர் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆட்கொணர்வு மனுவில் சட்டத்தரணி குருபரன் மனுத் தொடர்பாக விவாதம் செய்திருந்தார்.

இதன்படி அவ் ஆட்கொணர்வு மனுவில் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டில் இருந்த போது ஒப்ரேசன் ரிவிரெச ஊடாக யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குடியமர்ந்தார்கள். இதன்போது சாவகச்சேரி நாவற்குழி அரியாலை பகுதிகளில் இராணுவத்தால் கடத்தப்பட்டு இராணுவத்தாலேயே இவர்கள் காணமல் ஆக்கப்பட்டிருந்தார்கள் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது