www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், நவம்பர் 08, 2017

அரசியல் கைதிகளுக்காக வகுப்புகளுக்குள் போராட்டம் நடத்துவோம்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடவுள்ளதாகவும், அதேசமயம் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் தங்களுடைய பொறுப்பை அறிந்து சகல அரசியல் கைதிகளினதும் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன் கோரியுள்ளார்.

இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 'தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியிருந்த கதவடைப்பு போராட்டத்தினால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 3 பீடங்களில் வகுப்பு புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தற்போது அரசியல் கைதிகளுக்கு ஆதரவான போராட்டத்தை மாணவர்கள் நிறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து 13 ஆம் திகதி வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

13 ஆம் திகதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பல்கலைகழகத்திற்குள் அமைதியான முறையில் அரசியல் கைதிகளுக்காக போராட்டம் நடத்துவோம். அதேபோல் தமிழ் மக்கள் அரசியல் கைதிகளுடைய விடுதலையின் தேவையை உணர்ந்து அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் அரசியல் கைதிகளுக்காக இணைந்து போராட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக கோரிக்கை விடுத்தார்.சமஸ்டி அரசியல் யாப்பே எமது உரித்துக்களை உரிய முறையில் தரவல்லது! - விக்னேஸ்வரன்