www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், நவம்பர் 28, 2017

கைது அச்சத்தில் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார் கோட்டாபய

தன்னை கைது செய்வதற்கான முயற்சிகளை தடுத்து நிறுத்தும்படி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தனக்கெதிரான பொதுச் சொத்துக்களை மோசடி செய்த வழக்கில் நாளைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ச இந்த மனுவை இன்றைய தினம் முற்பகல் தாக்கல் செய்திருக்கின்றார்.
தனது தந்தையான டீ.ஏ ராஜபக்சவின் பெயரில் அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்காக அரச நிதியிலிருந்து 90 மில்லியன் ரூபாவைப் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீது குற்றச்சாட்டு காணப்படுகிறது.
இது சம்பந்தமான வழக்கை பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு தாக்கல் செய்திருக்கின்ற நிலையில், பொலிஸாருக்கு இந்த விசாரணைகளை முன்னெடுக்க முடியுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கூடியது.  
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருக்கின்ற நிலையில் இன்றைய தினம் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, ரொமேஷ் டி சில்வா, மனுதாரரை கைது செய்வதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்கு எதிராக தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மன்றில் கோரிக்கை விடுத்தார்.
எனினும் மேன்முறையீட்டு நீதியரசர்களான எல்.ரி.பீ தெஹிதெனிய, ஷிரான் குணதிலக ஆகியோர் இது தொடர்பான தீர்மானத்தை நாளைய தினம் அறிவிப்பதாக இன்று அறிவித்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயர்குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தற்சமயம் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யப்போவதாக வெளியாகிய தகவல்களை அடுத்து தென்னிலங்கையில் பரபரப்பான நிலை தோன்றியுள்ளது.