www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், நவம்பர் 22, 2017

போயஸ் இல்லத்திற்குள் டிடிவி ஆதரவாளர்கள் நுழைய முயற்சி! போலீசாருடன் வாக்குவாதம்!

வெற்றிவேல் உள்ளிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டன் வர உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ஏராளமான போலீசார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 




தொடர்ந்து சிறிது நேரத்தில் போயஸ் கார்டனுக்கு வந்த வெற்றிவேல் மற்றும் செந்தமிழன் உள்ளிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஜெயலலிதாவுக்கான மாதச்சடங்குகளை செய்ய அனுமதிக்காமல் காவல்துறையினர் தடுத்ததால் வெற்றிவேல் மற்றும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


மாதந்தோறும் நடைபெறும் நிகழ்வுக்கு தற்போது அனுமதி மறுக்கப்படுவது ஏன் என வெற்றிவேல் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் வருமானவரித்துறை சோதனை நடந்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.